11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 7 ஆண்டு சிறை

சென்னை: சென்னை மயிலாப்பூரை சேர்ந்த 58 வயதான ரவி கடந்த 2018ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பாட்டி மயிலாப்பூர் மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் போக்சோ சட்டப் பிரிவுகளின்கீழ் ரவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பு விசாரணைக்கு வந்தது. சாட்சி விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளார்.

Related Stories:

More