மபி.யில் பெண் போலீஸ் ஆணாக மாற அனுமதி

போபால்: மத்திய பிரதேசத்தில் பெண் கான்ஸ்டபிள் ஒருவர் அறுவை சிகிச்சையின் மூலமாக ஆணாக மாறுவதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜ கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு காவல்துறையில் பணியாற்றி வரும் பெண் போலீஸ் ஒருவர், அறுவை சிகிச்சையின் மூலம் ஆணாக மாற விரும்பினார். இதற்காக அனுமதி கேட்டு, காவல் தலைமையகத்தில் கடந்த 2019ம் ஆண்டு விண்ணப்பித்தார். அதே போல், அரசாணையிலும் மாற்ற விண்ணப்பித்தார்.

இதையடுத்து, காவல் தலைமையகம் அவரது விண்ணப்பத்தை மாநில உள்துறைக்கு அனுப்பி வைத்தது. இதனைப் பரிசீலித்த உள்துறை அமைச்சகம், அவர் ஆணாக மாறுவதற்கு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக,  மத்திய பிரதேச உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், `விதிகளின்படி, ஆணோ, பெண்ணோ தனது பாலினம், மதத்தை மாற்றிக் கொள்ள உரிமை உள்ளது. அதன் அடிப்படையில், பெண் கான்ஸ்டபிள் தனது பாலினத்தை ஆணாக மாற்றுவதற்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது,’ என்று கூறப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள பெண்ணை ஆணாக மாறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருப்பது இதுவே முதல்முறை.

Related Stories: