பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தல்: 94 வயதில் மீண்டும் களம் காணும் மாஜி முதல்வர்?: வேட்பாளர்களை முதலில் அறிவித்தது அகாலி தளம்

சண்டிகர்: பஞ்சாப் சட்டப் பேரவை தேர்தலில் 94 வயதான முன்னாள் முதல்வர் களம் காண உள்ளதாக வேட்பாளர்கள் பட்டியலை முதலில் அறிவித்த சிரோன்மணி அகாலி தளம் கூறி வருகிறது. நாட்டின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் முன்னாள் முதல்வரும், சிரோன்மணி அகாலி தளம் கட்சியின் தலைவருமான எம்எல்ஏ பிரகாஷ் சிங் பாதல், வரும் 8ம் தேதி தனது 94 வயதை தொடுகிறார். அடுத்தாண்டு தொடக்கத்தில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், பிரகாஷ் சிங் பாதல் மீண்டும் தேர்தல் களம் காணமாட்டார் என்று தகவல்கள் கூறின. காரணம், சிரோன்மணி அகாலி தளம் கட்சியானது, மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு சீட் பங்கீட்டையும் முடித்துக் கொண்டது.

இந்த கூட்டணியில் ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, சிரோன்மணி அகாலி தளம் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் 97 தொகுதிகளில் போட்டியிடுகிறது. மேலும் 89 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலையும் முதன்முதலாக அறிவித்துவிட்டது. மீதமுள்ள தொகுதிகளில் யார் போட்டியிட உள்ளனர்? என்பது சஸ்பென்சாக  உள்ளது. பெரும்பான்மையான வேட்பாளர்களை அறிவித்துவிட்டதால், இக்கட்சி தேர்தல் பிரசாரத்தையும் தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், இதுவரை 10 முறை எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்ட பிரகாஷ் சிங் பாதலை மீண்டும் தேர்தலில் களம் இறக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘வரும் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர் சுக்பீர் பாதல், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு இருக்கும் பிரகாஷ் சிங் பாதலின் சொந்த தொகுதியான ஜலாலாபாத்தில் போட்டியிடுவதாக இருந்தது. ஆனால், இந்த தேர்தலிலும் பிரகாஷ் சிங் பாதல் போட்டியிட உள்ளார். ஆனால், பிரகாஷ் சிங் பாதலின் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவரது மகளும் முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஹர்சிம்ரத் கவுர் பாதல் போட்டியிடவும் வாய்ப்புள்ளது. வேட்பாளர் பட்டியல் இறுதி ெசய்யப்படாததால், பிரகாஷ் சிங் பாதல் மீண்டும் தேர்தலில் போட்டி குறித்து தற்போதைக்கு முடிவு செய்யப்படவில்லை’ என்றனர்.

Related Stories: