ஆழியார் கவியருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

ஆனைமலை: பொள்ளாச்சியை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அமைந்துள்ள சுற்றுலாத்தலமான கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அருவியில் கொட்டும் அதிகப்படியான வெள்ளத்தில் பாறைகள் மற்றும் மரக்கிளைகள் உருண்டு வரக்கூடும் என்பதால் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இதனால் பல பகுதிகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

 காற்றழுத்த தாழ்வு நிலையால் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளான அப்பர் ஆழியாறு, வால்பாறை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆழியாறு அணையின் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி உள்ளதால் அவ்வப்போது அணைக்கு வரும் நீர் வரத்திற்கு ஏற்றார்போல் உபரி நீர் வெளியேற்றப்படுவதால் ஆழியாறு ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் தொடர்ச்சியாக ஆழியாறு ஆற்றங்கரை ஓரத்தில் வசிக்கும் மக்களுக்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்கூட்டியே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: