கொடைக்கானல் கீழ்மலையில் விளைநிலங்களை சேதமாக்கிய ஒற்றை யானை விரட்டியடிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானல் கீழ்மலையில் விளைநிலங்களை சேதப்படுத்திய ஒற்றை யானை வனத்திற்குள் விரட்டியடிக்கப்பட்டது.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலையில் உள்ள தாண்டிக்குடி, கன்னிவாடி வனச்சரக பகுதிகளுக்குள் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை அப்பகுதி விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் தோட்டங்களுக்கு செல்லவே அச்சப்பட்டு வந்தனர். இந்நிலையில் ஒற்றை யானை, பள்ளத்து கால்வாய் என்ற பகுதியில் சோலார் மின்வேலிகளை உடைத்து விளைநிலங்களுக்குள் புகுந்தது.

தகவலறிந்து வந்த மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையிலான 26 பேர் கொண்ட வனத்துறை குழுவினர், யானையை வெடி வெடித்து வனப்பகுதிக்குள் விரட்டும் பணியை மேற்கொண்டனர். வனத்துறையினரின் நீண்ட போராட்டத்திற்கு பின் அந்த ஒற்றை யானை நேற்று ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்குள் அனுப்பி வைக்கப்பட்டது. மீண்டும் அந்த யானை விளைநிலப்பகுதிக்கு வராமல் தடுக்க வனத்துறையினர் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: