வடகிழக்கு பருவமழை 2021-ன் நிலவரம்.: வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல்

சென்னை: வடகிழக்கு பருவமழை 2021-ன் நிலவரம் குறித்து வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம் தகவல் வெளியிட்டுள்ளது.

1. மழை அளவு:

கடந்த 24 மணி நேரத்தில், 35 மாவட்டங்களில் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ள நிலையில் மாநில சராசரி 7.75 மி.மீ. ஆகும். 2 இடத்தில் மிக கனமழையும், 2 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 22.36 மி.மீட்டரும், வேலூர் மாவட்டத்தில் 21.55 மி.மீட்டரும், தேனி  மாவட்டத்தில் 20.35 மி.மீட்டரும், இராணிப்பேட்டை 19.93 மி.மீட்டரும், விருதுநகர் 16.93 மி.மீட்டரும், நீலகிரி மாவட்டத்தில் 16.38 மி.மீட்டரும், விழுப்புரம் மாவட்டத்தில் 15.66 மி.மீட்டரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 14.63 மி.மீட்டரும், திருவள்ளூர் மாவட்டத்தில் 14.20 மி.மீட்டரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13.68 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.

வடகிழக்கு பருவமழை 01.10.2021 முதல் 30.11.2021 வரை 651.1 மி.மீ பெய்துள்ளது. இது இயல்பான மழையளவான 356.0 மி.மீட்டரை விட 83 சதவீதம் கூடுதல் ஆகும்.

2. முக்கிய அணைகள் / நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு, நீர் வரத்து மற்றும் நீர் வெளியேற்ற விபரம்;

வ.எண்.    அணை / நீர்த்தேக்கம்    நீர் இருப்பு (மி.க.அ.)    நீர் வரத்து (கன அடி)    நீர்  வெளியேற்றம் (கன அடி)    

1.           செம்பரம்பாக்கம்                      3187                             1025                                  3150    

2.           செங்குன்றம்                              2908                             1635                                  1705    

3.            பூண்டி                                              2861                             14007                                  15084    

4.            சோழவரம்                                      817                             1137                                  1415    

5.            மேட்டூர்                                           93470                             11500                                  11500    

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 14,138 ஏரிகளில், 8286 ஏரிகள் முழுக்கொள்ளளவை எட்டியுள்ளது. 2788 ஏரிகள் 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 90 நீர்த்தேக்கங்களின் மொத்த கொள்ளளவான 224.297 T.M.C, 210.445 T.M.C இருப்பு உள்ளது. இது 93.82 சதவீதம் ஆகும்.

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை, நீர்த்தேக்கங்களுக்கு வரும் நீர்வரத்து ஆகியவை கணக்கிடப்பட்டு, சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கியமான ஐந்து நீர்த்தேக்கங்கள் மற்றும் மாநிலத்தில் உள்ள இதர அணைகளிலிருந்து, நீர் திறப்பு குறித்து பொதுமக்களுக்கு உரிய முன்னறிவிப்பு அளித்து, பாதுகாப்பான அளவு நீரை நீர்த்தேக்கங்களில் இருப்பு வைத்துக்கொண்டு, பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாக அவ்வப்போது உபரி நீர் திறந்துவிடப்பட்டதால், பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளது.

3. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 30.11.2021 நாளிட்ட அறிக்கை;

இன்று (01.12.2021)  கடலோர மாவட்டங்களில் தனித்த ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. நாளை (02.12.2021) மாநிலம் முழுவதும்  தனித்த ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்

4. மீட்பு;

தேசிய பேரிடர் மீட்பு படையின் 4 குழுக்களில் சென்னையில் - 2 குழுக்கள், திருவள்ளுரில் - 1 குழு, காஞ்சிபுரத்தில் - 1 குழு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

* பெருநகர சென்னை மாநகராட்சி

1 மழை நீர் தேங்கியுள்ள 561 பகுதிகளில், 363 பகுதிகளில் தேங்கியுள்ள மழை நீர் அகற்றப்பட்டுள்ளது. எஞ்சிய 198 பகுதிகளில் அதிக திறன் கொண்ட பம்புகள் மூலம் நீர் அகற்றப்பட்டு வருகிறது.

2 இதுவரை 16,818 மருத்துவ முகாம்கள் மூலம் 5,30,574 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

3 மழை நீர் சூழ்ந்த பகுதிகளில், மழை நீரை வெளியேற்ற 46 JCB-களும், 918 அதிக திறன் கொண்ட பம்புகளும் தயார் நிலையில் உள்ளன. 54 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

5. சேதங்கள்;

கடந்த 24 மணி நேரத்தில் மழையினால் இராமநாதபுரத்தில் ஒரு நபர் சுவர் இடிந்து விழுந்ததால் இறந்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், 436 கால்நடைகளும், 6817 கோழிகளும் இறந்துள்ளன. 2571 குடிசைகள் பகுதியாகவும், 189 குடிசைகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 2760 குடிசைகளும், 431 வீடுகள் பகுதியாகவும், 5 வீடுகள் முழுமையாகவும், ஆக மொத்தம் 436 வீடுகள் சேதமடைந்துள்ளன.

6. நிவாரண முகாம்கள்;

செங்கல்பட்டு, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், ராணிப்பேட்டை, நீலகிரி, தூத்துக்குடி, திருச்சிராப்பள்ளி, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மாவட்டங்களில் மொத்தம் 211 முகாம்களில், 13,954 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி பகுதியில் 2,148 நபர்கள் 15 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 45,860 உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன.

* சென்னை மாவட்டத்தில் 2045 நபர்கள் 39 நிவாரண முகாம்களிலும்,

* திருவள்ளூர் மாவட்டத்தில், 826 நபர்கள் 12 நிவாரண முகாம்களிலும்,

* செங்கல்பட்டு மாவட்டத்தில், 2045 நபர்கள் 39 நிவாரண முகாம்களிலும்,

* காஞ்சிபுரம் மாவட்டத்தில், 957 நபர்கள் 22 நிவாரண முகாம்களிலும்,

* கடலூர் மாவட்டத்தில், 477 நபர்கள் 9 நிவாரண முகாம்களிலும்,

* மயிலாடுதுறை மாவட்டத்தில், 204 நபர்கள் 1 நிவாரண முகாம்களிலும்,

* மதுரை மாவட்டத்தில், 277 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,

* புதுக்கோட்டை மாவட்டத்தில், 207 நபர்கள் 4 நிவாரண முகாம்களிலும்,

* இராமநாதபுரம் மாவட்டத்தில், 356 நபர்கள் 6 நிவாரண முகாமிலும்,

* தூத்துக்குடி மாவட்டத்தில், 480 நபர்கள் 7 நிவாரண முகாம்களிலும்,

* கன்னியாகுமரி மாவட்டத்தில், 505 நபர்கள் 3 நிவாரண முகாம்களிலும்,

* பெரம்பலூர் மாவட்டத்தில், 26 நபர்கள் 3 நிவாரண முகாம்களிலும்,

* இராணிப்பேட்டை மாவட்டத்தில், 281 நபர்கள் 9 நிவாரண முகாமிலும்,

* நீலகிரி மாவட்டத்தில், 38 நபர்கள் 1 நிவாரண முகாமிலும்,

* திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில், 150 நபர்கள், 1 நிவாரண முகாமிலும்,

* திருப்பத்தூர் மாவட்டத்தில், 670 நபர்கள், 16 நிவாரண முகாம்களிலும்,

* திருவாரூர் மாவட்டத்தில், 69 நபர்கள், 2 நிவாரண முகாம்களிலும்,

* திருவண்ணாமலை மாவட்டத்தில், 1023 நபர்கள் 33 நிவாரண முகாம்களிலும்,

* வேலூர் மாவட்டத்தில், 3044 நபர்கள் 30 நிவாரண முகாம்களிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பொது.....

* பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறைக்கு 8571 புகார்கள் வரப்பெற்று, 2681 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளது.  எஞ்சிய புகார்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

* மாநில அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 7328 புகார்கள் வரப்பெற்றதில், 5670 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

* மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு அறைக்கு வரப்பெற்ற 5664 புகார்களில், 5521 புகார்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன.

* சென்னையில் மாநில அவசரக் கட்டுப்பாட்டு மையம் 1070, மாவட்டங்களில் மாவட்ட அவசரக் கட்டுப்பாட்டு மையங்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசியுடன், 24 மணி நேரமும் இயங்கி வருகிறது.

மேலும், பெருநகர சென்னை மாநகராட்சி தொடர்பான புகார்களுக்கு பொதுமக்கள் 1913 என்ற கட்டணமில்லா தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ளலாம்.

Related Stories:

More