மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ்

டெல்லி: மக்களவையில் விவசாயிகள் பிரச்சனை குறித்து விவாதிக்குமாறு திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்க சட்டம் இயற்றுவது பற்றி விவாதிக்க கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து விவாதிக்கவும் டி.ஆர்.பாலு நோட்டீஸ் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டின் வெள்ளச்சேதம் குறித்து மக்களவையில் குறுகிய கால விவாதம் நடத்த கோரி திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. வெள்ளச்சேதம் பற்றி மக்களவையில் விவாதிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் தயாநிதி மாறனும் கோரியுள்ளார்.

Related Stories: