மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை வீழ்ச்சி...ஒரு சவரன் ரூ. 35,904க்கு விற்பனை : குஷியில் நகை பிரியர்கள்!!

சென்னை : சமீப காலமாகவே தங்கம் விலை உயர்வால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். கொரோனா, மழை வெள்ளம் போன்ற பிரச்சினைகளுக்கு இடையில் தங்கம் விலையும் உயர்ந்து வாடிக்கையாளர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி தரும் விதமாக மாதத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் என்ன என்று இங்கே பார்க்கலாம்.

சென்னையில் இன்று (டிசம்பர் 1) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,488ஆகக் குறைந்துள்ளது. அதேபோல, 8 கிராம் ஆபரணத் தங்கம் 320 ரூபாய் குறைந்து 35,904 ரூபாய்க்கு விற்பனையாகிறது.கூடுதல் மகிழ்ச்சி தரும் விதமாக, வெள்ளி விலையும் இன்று குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை நேற்று ரூ.66.50 ஆக இருந்தது. இன்று அது ரூ.66.30 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 66,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories:

More