நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் இந்திய பொருளாதாரம் 8.4% வளர்ச்சி.. ஒன்றிய அரசு அறிவிப்பு..

டெல்லி : இந்தியாவில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தொடர்ந்து 4வது காலாண்டாக உயர்ந்துள்ள நிலையில், நடப்பாண்டில் 2வது காலாண்டில் 8.4%உயர்வை கண்டுள்ளது. 2021-2022 நிதியாண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலாண்டில் ஜிடிபி எனப்படும் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 8.4%ஆக அதிகரித்துள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் ஜூன் காலாண்டில் 20.1 என்ற அபரிவிதிமான வளர்ச்சி இல்லாவிட்டாலும் தொடர்ந்து 4வது காலாண்டாக ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் வளர்ச்சி பாதையில் சென்று வருகிறது.

2020-2021 நிதியாண்டின் 2வது காலாண்டை ஒப்பிடும் போது 7.4 என்ற சதவீதத்தில் இருந்து நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டு இந்திய பொருளாதாரம் 8.4% வளர்ச்சி..அறிவிப்பு..க உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவசாயம், சுரங்கம், உற்பத்தி, மின்சாரம் மற்றும் நீர் வழங்கல், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற முக்கிய துறைகளில் காணப்பட்ட நேர்மறை வளர்ச்சியே ஜிடிபி உயர்வுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. 

Related Stories: