2 ஆண்டுகளுக்கு பிறகு நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மீண்டும் பேருந்துகள் இயக்கம்!!

சென்னை : கொரோனா பரவலால் நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரத்திற்கு செல்லும் பேருந்துகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயக்கப்படாமல் இருந்த நிலையில் இன்று முதல் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேரள போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ,  கேரள அரசின் கோரிக்கையை ஏற்று தமிழகம் - கேரளா இடையே மீண்டும் பேருந்து போக்குவரத்து சேவையை ,தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அனுமதித்துள்ளார். இதனால் இன்று முதல் தமிழ்நாட்டிற்கு கேரள அரசு பேருந்துகள் இயக்கப்படும். முதற்கட்டமாக நாகர்கோவில், கோயம்புத்தூர், பழனி, வேளாங்கண்ணி, தென்காசி ஆகிய இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும் என்றார் .

Related Stories:

More