குறைந்தபட்ச ஆதரவு விலை: பேச்சுவார்த்தைக்கு ஒன்றிய அரசு அழைப்பு

புதுடெல்லி: டெல்லியில் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போராட்டத்தின் காரணமாக, சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களையும் ஒன்றிய அரசு ரத்து செய்து விட்டது. இதற்கான மசோதாவை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று முன்தினமே நிறைவேற்றியது. இதை வரவேற்றுள்ள விவசாயிகளின் சங்கமான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, குறைந்தப்பட்ச ஆதரவு விலை உத்தரவாதம் உள்ளிட்ட மற்ற 6 கோரிக்கைகளை நிறைவேற்றும்படி ஒன்றிய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், குறைந்தப்பட்ச ஆதரவு விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, விவசாய சங்கங்களின் சார்பில் 5 பெயர்களை பரிந்துரை செய்யும்படி ஒன்றிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது பற்றி சம்யுக்தா கிசான் மோர்ச்சாவின் தலைவர் தர்ஷன் பால் டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘ஒன்றிய அரசு கேட்டுள்ளபடி ஆலோசனை குழுவில் இடம் பெறும் 5 விவசாய பிரதிநிதிகளின் பெயர்கள், வரும் 4ம் தேதி நடக்கும் விவசாய சங்க நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: