புதுடெல்லி: ஒமிக்ரான் வைரஸ் ஏற்கனவே கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களை அதிகளவில் தாக்கும் அபாயம் இருப்பதாக முதற்கட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. எனவே கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென மருத்துவ நிபுணர்கள் கூறி உள்ளனர். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் புதிய வகை கொரோனா வைரஸ் மிக ஆபத்தானது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. இந்த வைரசை கட்டுப்படுத்த உலக நாடுகள் பயண தடைகளை விதித்துள்ளன.
நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு, பலி நிலவரங்கள் பற்றி ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை:
* சர்வதேச விமானங்களுக்கு தடை விதிக்காதது ஏன்?ஒமிக்ரான் வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உடனேயே, சர்வதேச பயண தடை விதிக்கக் கோரி டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாக பிரதமர் மோடிக்கும் அவர் கடிதம் எழுதி உள்ளார். மேலும், நேற்று அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘ஒமிக்ரான் வைரசால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு விமான சேவையை நிறைய நாடுகள் நிறுத்தி உள்ளன. ஆனால், இந்த விஷயத்தில் ஒன்றிய அரசு தாமதிப்பது ஏன்? சர்வதேச விமானங்களை நிறுத்தாததால்தான் கொரோனா முதல் அலையை நாம் எதிர்கொண்டோம். ஏராளமான விமானங்கள் டெல்லிக்கு தான் வருகின்றன. எனவே, டெல்லிக்குதான் அதிக பாதிப்பு இருக்கிறது. உடனடியாக விமானங்களை நிறுத்துங்கள்,’ என ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்தி உள்ளார்.* வீட்டிற்கே சென்று தடுப்பூசி; டிச.31ம் தேதி வரை நீட்டிப்புஒமிக்ரான் வைரசை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, ஒன்றிய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் தலைமையில் மாநில சுகாதார அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. இதில், டிசம்பர் 31ம் தேதிக்குள் நாடு முழுவதும் அனைவருக்கும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தவும், 2வது டோஸ் தடுப்பூசி பணியை வேகப்படுத்தவும், டிசம்பர் 31ம் தேதி வரை வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை தொடரவும் முடிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 3ம் தேதி பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இத்திட்டம் நவம்பர் 30ம் வரை இருக்கும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதே போல், புதிய வகை வைரஸ் அச்சுறுத்தல் இருப்பதால் நாடு முழுவதும் உள்ள கொரோனா கட்டுப்பாடுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா அறிவித்துள்ளார்.