மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள மின்வாரிய அலுவலகங்களில் தளவாட பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை சரி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அந்தவகையில் சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.   இதுகுறித்து மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் பொதுச்செயலாளர் சுப்ரமணியன் கூறியதாவது: புதியதாக உருவாக்கப்பட்ட துணை மின் நிலையங்களுக்கும் மறுபகிர்வு செய்யப்பட்ட கட்டுமானம் உள்ளிட்ட இடங்களுக்கும் பதவிகள் அனுமதித்திட வேண்டும். ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக துவங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோம்.

Related Stories:

More