×

பள்ளி மாணவிகள் 21 பேருக்கு கொரோனா

குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால், சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் உட்பட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள வருகின்றனர். தற்போது பள்ளிகளும் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்  குன்னூரில் உள்ள ஒரு மாணவிகள் தங்கும் விடுதியில் 21 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சுகாதாரத்துறையினர், நகராட்சி ஊழியர்கள் விடுதிக்கு சீல் வைத்து நோட்டீஸ் ஒட்டினர். பாதிக்கப்பட்ட அனைவரும் குன்னூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Tags : Corona , Corona for 21 schoolgirls
× RELATED கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால்...