லடாக்கில் தொடரும் நிலநடுக்கம்

லே: நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமீப காலமாக நிலநடுக்கம் அதிகளவில் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, இமயமலை அடிவார மாநிலங்களில் இது ஏற்படுகிறது. இதனால், மக்கள் பீதியில் உள்ளனர். ஜம்மு காஷ்மீர் மாநில சர்வதேச எல்லை, லடாக் யூனியன் பிரதேசங்களிலும் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், லடாக் யூனியன் பிரதேசத்தில் நேற்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டேர் அளவுகோளில் 3.7 புள்ளிகளாக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு லேவை மையமாக கொண்டு நிலநடுக்கம் உருவாகி இருந்தது. யூனியன் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் எந்தவித சேதங்களும் ஏற்படவில்லை.

Related Stories:

More