கடற்படை தளபதியாக ஹரி குமார் பதவியேற்பு

புதுடெல்லி: இந்திய கடற்படையின் தளபதியாக பதவி வகித்து வந்த அட்மிரல் கரம்பீர் சிங்கின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது. அவர் பணி ஒய்வு பெற்றதை தொடர்ந்து, கடற்படையின் புதிய தளபதியாக அட்மிரல் ஹரி குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் கடந்த 1983ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி கடற்படை பணியில் சேர்ந்தார். 39 ஆண்டுகள் அவர் கடற்படையின் பல்வேறு பிரிவுகளில் சேவையாற்றி உள்ளார். ஐஎன்எஸ் நிஷாங்க், ஏவுகணைகளை தகர்க்கும் ஐஎன்எஸ் கோரா மற்றும் ஐஎன்எஸ் ரன்வீர், கடற்படையின் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விராட் உள்ளிட்ட போர்க்கப்பல்களின் தலைமை பொறுப்பையும் வகித்துள்ளார். கடற்படை தளபதியாக நியமிக்கும் முன்பாக, மேற்கு கடற்படை தளபதியாகவும் பணியாற்றி உள்ளார்.

Related Stories:

More