குடியரசு நாடானது பார்படாஸ்: மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

சான் ஜூவான்: இரண்டாவது ராணி எலிசபெத்தின் ஆளுமையில் இருந்து விடுவிக்கப்பட்டு கரீபியன் நாட்டில் உள்ள  பார்படாஸ், குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. கரீபியன் நாட்டில் உள்ள பார்படாஸ் தீவு, ஐக்கிய அரசுகளின் ஆளுமையின் கீழ் 1966ம் ஆண்டு வந்தது. அதன் பின் இரண்டாம் ராணி எலிசபெத்தின் விசுவாசிகளாக அத்தீவு மக்கள் இருந்து வந்தனர். எனவே, அங்கு முடியாட்சி நடந்து வந்தது. இந்நிலையில், 2008ம் ஆண்டு, பார்டாஸ் குடியரசாக மாற வேண்டும் என்ற வாக்கெடுப்பு முன்மொழியப்பட்டது. ஆனால், அது காலவரையின்றி தாமதமாகி வந்தது.

கடந்த ஆண்டு, பார்படாஸ் அரசியலமைப்பு முடியாட்சியாக இருப்பதை ஒழிக்கும்  திட்டங்களை அறிவித்தது. மேலும், தேசிய ஹீரோஸ் சதுக்கத்தில் இருந்து பிரிட்டிஷ் வைஸ்  அட்மிரல் ஹொராஷியோ நெல்சனின் சிலையை அகற்றியது. இந்நிலையில், மக்கள் விருப்பம் போல் நேற்று அதிகாரப்பூர்வ குடியரசு நாடாக அறிவிக்கப்பட்டுள்ள பார்படாசில் நள்ளிரவில் பட்டாசு வெடித்து மக்கள் உற்சாகமாக கொண்டாடினர். தீவு முழுவதும் திரைகள் அமைத்து ஏராளமான இசை கலைஞர்கள் பாடல்களை இசைத்து கொண்டாடியது ஒளிபரப்பப்பட்டது. ‘அனைவருக்கும் சுதந்திர தினவாழ்த்துகள் மற்றும் சுதந்திரம்’ என்று எழுதி பறக்க விடப்பட்டது.

Related Stories: