துபாய் ஜிம்னாஸ்டிக் சென்னை மாணவிக்கு வெண்கலம்

துபாயில் 11வது சர்வதேச ஆஸ்பயர் ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது. அதில் 6 நாடுகளை சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில் பங்கேற்ற சென்னையை சேர்ந்த தனியார் பள்ளி 4ம் வகுப்பு மாணவி  அரியனா ஓபராய் ஒட்டுமொத்த சிறப்பு பங்களிப்புக்காக வெண்கலப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்று தமிழகம் திரும்பிய மாணவி ஓபராய்க்கு தமிழ்நாடு ஜிம்னாஸ்டிங் சங்கம் சார்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related Stories:

More