×

திமுக இளைஞரணி சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே பூண்டி கிழக்கு ஒன்றியம் இளைஞரணி திமுக சார்பில், மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவின் பிறந்த நாளையொட்டி போந்தவாக்கம் ஊராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பூண்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பூண்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் டி.கே.சந்திரசேகர் தலைமை தாங்கினார். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் தில்லைகுமார் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் பி.ஜெ.மூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் அபிராமி குமரவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கே.வி.லோகேஷ், கேசவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், பாலவாக்கம் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கே.வி.லோகேஷ் தலைமை தாங்கினார். கும்மிடிபூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் மழையால் பாதிக்கப்பட்ட, 20 இருளர் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, காய்கறி ஆகியவைகளை வழங்கினார். இதில், பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், ஒன்றிய கவுன்சிலர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Tags : DMK Youth , Welfare assistance to cleaners on behalf of DMK Youth
× RELATED திமுக இளைஞரணி சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம்