×

உலக சதுரங்க சாம்பியன்ஷிப்: வேலம்மாள் பள்ளி சாதனை

திருவள்ளூர்: உலகளவில் பள்ளிகளுக்கான சதுரங்க சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று வேலம்மாள் பள்ளி சாதனை படைந்தது. உலக சதுரங்க சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டி துபாயில் நடந்தது. இதில், பெருவையை சேர்ந்த சாகோ ஆலிவெரோஸைவை 3 - 2 என்ற கணக்கில் சென்னை, வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் தோற்கடித்து இந்த உலக சதுரங்க சாம்பியன் ஷிப் போட்டியில் வெற்றி பெற வேலம்மாள் சர்வதேச மாஸ்டர் பிரணவ், மாஸ்டர் ரிந்தியா ஆகியோருடன் கிராண்ட் மாஸ்டர்கள் டி .குகேஷ், ஆர்.பிரக்ஞானந்தா, லியோன் மென்டோன்கா ஆகியோர் கொண்ட குழு உதவியது. சாதனை படைத்த சதுரங்க வித்தகர்களின் சிறப்பான சாதனைக்குப் பள்ளி தாளாளர் எம்.வி.எம்.மோகன் மற்றும் முதல்வர் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். ஓவர் தி போர்டு பிரிவுக்கு தகுதி பெற்று உலகெங்கிலும் உள்ள முதல் 12 அணிகளில் வேலம்மாள் குழுமமும் ஒன்றாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : World Chess Championship ,Velammal School Achievement , World Chess Championship: Velammal School Achievement
× RELATED நெல்லூர் அருகே செம்மரம் வெட்டி கடத்த...