ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மதகை திறக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை

ஊத்துக்கோட்டை: கிராமத்துக்குள் ஏரி நீர் புகுந்ததால், மதகை திறக்கக்கோரி, ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இங்கு, 44 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது பெய்து வரும் கனமழையால் நிரம்பியுள்ளது. இதில், ஒரு மதகு நெல்வாய் பகுதியிலும், மற்றொரு மதகு வெள்ளாத்துக்கோட்டை பகுதியிலும் அமைந்துள்ளது. வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள மதகு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் மூடியே கிடக்கிறது.

மேலும், ஏரி நீர், வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் மழைநீர் ஊருக்குள் செல்கிறது. இதையொட்டி, அந்த மதகை திறக்க வேண்டும். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஆல்பீஜான் வர்கீசிடம் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு, வெள்ளாத்துக்கோட்டை கிராம மக்கள், நேற்று காலை கூட்டமாக சென்றனர். அங்கு, தாலுகா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கலெக்டரிடம் கொடுத்த மனுவுக்கு நடவடிக்கை வேண்டும் என கோஷமிட்டனர்.

அப்போது ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் அணைக்கட்டு ஆகியவற்றைபார்வையிட வந்த கலெக்டர் எதிர்பாராமல் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது, அங்கிருந்த மக்களிடம், நீங்கள் மனு கொடுத்த மனுக்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். விரைவில், உங்கள் கோரிக்கை நிறைவேறும் என கூறி சென்றார்.  பின்னர், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ளாத்துக்கோட்டை ஏரி கலங்கல் திறப்பது குறித்தும், ஏரியில் நெல்வாய் கிராம மக்கள் மீன் பிடிக்க கூடாது. நாங்கள் ஓரிரு நாளில் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.  ஊருக்குள் தண்ணீர் புகுந்ததால் மதகை திறக்கக்கோரி தாலுகா அலுவலகத்தை கிராமமக்கள் முற்றுகை

ஊத்துக்கோட்டை: கிராமத்துக்குள் ஏரி நீர் புகுந்ததால், மதகை திறக்கக்கோரி, ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் 150க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள். இங்கு, 44 ஏக்கர் நிலப்பரப்பில் ஏரி உள்ளது. இந்த ஏரி தற்போது பெய்து வரும் கனமழையால் நிரம்பியுள்ளது. இதில், ஒரு மதகு நெல்வாய் பகுதியிலும், மற்றொரு மதகு வெள்ளாத்துக்கோட்டை பகுதியிலும் அமைந்துள்ளது. வெள்ளாத்துக்கோட்டை பகுதியில் உள்ள மதகு கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் மூடியே கிடக்கிறது.

மேலும், ஏரி நீர், வரத்து கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால் மழைநீர் ஊருக்குள் செல்கிறது. இதையொட்டி, அந்த மதகை திறக்க வேண்டும். கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் ஆல்பீஜான் வர்கீசிடம் நேற்று முன்தினம் மனு கொடுத்தனர். அதை பெற்றுக்கொண்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இந்நிலையில், ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகத்துக்கு, வெள்ளாத்துக்கோட்டை கிராம மக்கள், நேற்று காலை கூட்டமாக சென்றனர். அங்கு, தாலுகா அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு கலெக்டரிடம் கொடுத்த மனுவுக்கு நடவடிக்கை வேண்டும் என கோஷமிட்டனர்.

அப்போது ஊத்துக்கோட்டை, சிட்ரபாக்கம் அணைக்கட்டு ஆகியவற்றைபார்வையிட வந்த கலெக்டர் எதிர்பாராமல் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் வந்தார். அப்போது, அங்கிருந்த மக்களிடம், நீங்கள் மனு கொடுத்த மனுக்களை, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். விரைவில், உங்கள் கோரிக்கை நிறைவேறும் என கூறி சென்றார்.  பின்னர், ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெள்ளாத்துக்கோட்டை ஏரி கலங்கல் திறப்பது குறித்தும், ஏரியில் நெல்வாய் கிராம மக்கள் மீன் பிடிக்க கூடாது. நாங்கள் ஓரிரு நாளில் நோட்டீஸ் அனுப்ப நடவடிக்கை எடுக்கிறோம் என உறுதியளித்தனர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: