×

சுவரில் துளைப்போட்டு உள்ளே நுழைந்து அடகு கடையில் ஒரு கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளை: லாக்கர் உடையாததால் 200 சவரன் தப்பியது

செய்யூர்: செய்யூர் அருகே அடகு கடையின் சுவரில் துளையிட்டு, ஒரு கிலோ வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர். லாக்கர் உடைக்க முடியாததால், 200 சவரன் நகை தப்பியது. இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. செய்யூர் அடுத்த பவுஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (40). அதே பகுதி பஜாரில் அடகு கடை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு பிரகாஷ், வியாபாரம் முடிந்ததும், கடையை மூடிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை கடையை திறக்க வந்தபோது, அங்கிருந்த வெள்ளி பொருட்கள் மாயமானதை கண்டு திடுக்கிட்டார்.

நள்ளிரவில், கடையின் பின்புறம் சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். மேலும், கடையில் உள்ள லாக்கரை உடைக்க முடியாததால் அவர்கள் திரும்பி சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து அணைக்கட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது, சுவரில் துளையிட்டு உள்ளே நுழைந்த மர்மநபர்கள், ஒரு கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். லாக்கரை உடைக்க முடியாததால், 200 சவரன் நகை தப்பியது தெரிந்தது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது.


Tags : One kilo of silverware looted from pawn shop
× RELATED இளம்பெண்ணை வன்கொடுமை செய்து மொட்டை...