செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய எஸ்பியாக பி.அரவிந்தன் நியமனம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எஸ்பியாக சென்னை சிறப்பு பிரிவு சிஐடி எஸ்பி பி.அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு புதிய மாவட்டம் துவங்கி கடந்த 29ம் தேதியோடு 2 ஆண்டுகள் நிறைவடைந்தன. மாவட்டத்தின் முதல் எஸ்பியாக கண்ணன் நியமிக்கப்பட்டார். அவர் பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் சிக்கி, ஒரு வருடத்தில்  சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதன்பிறகு, சுந்தரவதனம் எஸ்பியாக நியமிக்கப்பட்டார். 100 நாட்கள் மட்டுமே பொறுப்பில் இருந்த அவர், சென்னை மாதவரம் துணை கமிஷனராக மாற்றப்பட்டார். இதையடுத்து, திருப்பத்தூர் எஸ்பியாக இருந்த பி.விஜயக்குமார் கடந்த 6 மாத்துக்கு முன் செங்கல்பட்டு எஸ்பியாக நியமிக்கப்பட்டார். தற்போது அவர், பணியிடம் மாற்றப்பட்டு, பி.அரவிந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் உருவாக்கப்பட்ட 2 வருடத்தில் 4 எஸ்பிக்கள் மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

More