இலங்கை தமிழர் மீதான மனித உரிமை மீறலை ஒன்றிய அரசு வேடிக்கை பார்க்கக்கூடாது: அன்புமணி அறிக்கை

சென்னை: பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் தமிழீழ விடுதலைப்போரில் வீரச்சாவடைந்த விடுதலைப்புலிகளின் தியாகத்தையும், தீரத்தையும் போற்றும் வகையில் கடந்த நவம்பர் 27ம் தேதி தமிழீழப் பகுதிகளில் நடத்தப்பட்ட  மாவீரர் நாள் நிகழ்வுகளை சிங்களப்படைகள் சிதைத்துள்ளன. மாவீரர் நாள் நிகழ்வுகள் குறித்து செய்தி சேகரித்த ஊடகவியலாளர்கள் மீது கொடும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இவை கண்டிக்கத்தக்கவை.

இலங்கையில் நடைபெறும் இத்தகைய அத்துமீலையும், மனித உரிமை மீறல்களையும் இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. இலங்கைப் போர்க்குற்றங்களில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதையும், தமிழர்கள் சுதந்திரமாக வாழ்வதை உறுதி செய்யும் வகையில்  தனித்தமிழீழம் குறித்து உலகம் முழுவதும் வாழும் ஈழத்தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்தப் படுவதையும் உறுதி செய்ய இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Related Stories: