9-12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை ஒத்திவைக்க ஓபிஎஸ் வலியுறுத்தல்

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கை: ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளை நடத்த உத்தரவிட்ட நிலையில், மழை பாதிப்பால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டாலும், கூடுதல் வகுப்புகள் நடத்தி மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தி முடிக்கப்படும் என்று அமைச்சர் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமைச்சரின் இந்த அறிவிப்பு  மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் மன அழுத்தத்தை அதிகரிக்க வழிவகுக்குமே தவிர, மாணவ, மாணவியர் மன நிம்மதியுடன் தேர்வுக்கு தயாராக வழிவகுக்காது.

பாடத்திட்டங்களை குறைத்து பொதுத் தேர்வை மே மாதத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என்பதே மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. எனவே தமிழக முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு, கொரோனா தொற்று நோய் பாதிப்பு மற்றும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, இதில் தொடர்புடையவர்களை அழைத்து பேசி, மாணவ, மாணவியர், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு கூறியுள்ளார்.

Related Stories:

More