என் மீதான குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை கிடையாது: திருமாவளவன் பேட்டி

புதுடெல்லி: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் டெல்லியில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் பேச வேண்டிய பிரச்சனைகள் நிறைய இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு கருத்தியல் ரீதியாக விமர்சனம் செய்யும் எங்களை திட்டமிட்டு அவதூறு பரப்புகிறார்கள். குறிப்பாக நான் தங்கியுள்ளது என் வீடு கிடையாது. அது எங்கள் அறக்கட்டளை அலுவலகம். ஒவ்வொரு மழையின் போதும் அங்கு, மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து வரும்.

அத்தகைய சமயங்களில் கூட நான் என் தொண்டர்களை விட்டு அங்கிருந்து சென்றதில்லை. மேலும் டெல்லிக்கு அவசரமாக புறப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தான் நாற்காலி மீது ஏறி நடந்தேன். அப்போது என்னை கீழே விழாமல் இருக்க எனது சக தொண்டர்கள் பார்த்து கொண்டார்கள். அது தான் தற்போது தேவையில்லாத விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.  அந்த குற்றச்சாட்டில் துளி அளவும் உண்மை கிடையாது.

Related Stories:

More