×

கடைக்காரருக்கு கத்திக்குத்து

சென்னை: தி.நகர் மேட்லி 2வது தெருவை சேர்ந்த கண்ணன் (47), தி.நகர் ராமேஸ்வரம் சாலை நடைபாதையில் செருப்பு கடை நடத்தி வருகிறார். கடந்த 28ம் தேதி அங்கு போதையில் வந்த 2 பேர், அருகில் உள்ள துணிக்கடையில் தகராறு செய்தனர். இதை கண்ணன் தட்டிக் கேட்டதால் ஆத்திரமடைந்த அந்த 2 பேர், அவரை சரமாரி தாக்கி கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.

போலீசார் விசாரணையில், எண்ணூர் காமராஜர் நகர் 7வது தெருவை சேர்ந்த மாபாஷா (25), அவரது நண்பர் டேவிட் (26) என தெரியவந்தது. மாபாஷா மீது 2 திருட்டு மற்றும் அடிதடி வழக்குகள் நிலுவையில் இருப்பதும் ெதரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் மாபாஷாவை கைது செய்தனர். அவனிடம் இருந்து ஒரு கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள டேவிட்டை தேடி வருகின்றனர்.

Tags : Screaming at the shopkeeper
× RELATED ஆவடி மாநகராட்சியில் தெருக்களில்...