கஞ்சா விற்ற 2 ரவுடிகள் கைது

அண்ணாநகர்: அரும்பாக்கம் சுடுகாடு பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அரும்பாக்கம் என்.எஸ்.கே.நகரை சேர்ந்த பிரபல ரவுடிகளான கார்த்திக் (28), சஞ்சீவ்குமார் (25) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் ஆந்திராவில் இருந்து கஞ்சா வாங்கி வந்து, அமைந்தகரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். கைதான கார்த்திக் மீது அமைந்தகரை காவல் நிலையத்தில் 3 கொலை வழக்குகளும், சஞ்சீவ்குமார் மீது அயனாவரம் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, 2 குண்டாஸ் வழக்குகளும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: