பறக்கை அருகே குழந்தைகள் கண் எதிரே பெண் தூக்கிட்டு தற்கொலை

நாகர்கோவில்: நாகர்கோவில் அருகே பறக்கையில் குழந்தைகள் கண் எதிரே மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெங்கம்புதூர்அருகே சிங்களேயர்புரியை சேர்ந்தவர் முருகன். கட்டிட தொழிலாளி. இவருக்கு பேயன்குழியை சேர்ந்த அஜிதா (36) என்பவருடன் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் ஆகி தர்ஷினி (5), தர்ஷன் (3) என இரு குழந்தைகள் உள்ளனர். தற்போது முருகன் பறக்கையை அடுத்த சிடிஎம்புரத்தில் வசித்து வருகிறார்.

முருகனுக்கு மது அருந்தும் பழக்கம் காரணமாக கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில், அஜிதா தனது குழந்தைகள் கண் முன்பு, வீட்டு முன்அறையில், தொட்டில் ஹூக்கில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குழந்தைகள், அம்மா அம்மா என கதறியுள்ளன. அப்போது வீட்டிற்கு வந்த முருகனிடமும், அம்மா தொங்குறாங்க எனக்கூறி கதறின. இதனையடுத்து, அஜிதாவை தூக்கில் இருந்து இறக்கி, ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முருகன் கொண்டு சென்றார்.

அங்கு அஜிதாவின் உடலை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 6 ஆண்டுகள் ஆகவில்லை என்பதால், ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெறுகிறது.

Related Stories:

More