ஒமிக்ரான் பரவல் எதிரொலி: விமானப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை: ஒமிக்ரான் வைரஸ் பரவல் எதிரொலியாக விமானப் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 12 நாடுகளில் இருந்து தமிழ்நாடு வருவோருக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு, முடிவு வரும் வரை வெளியே செல்லாமல் காத்திருக்க வேண்டும். கொரோனா இல்லை என பரிசோதனை முடிவு வந்தாலும், 7 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். கொரோனா உறுதி செய்யப்பட்டால் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளதா என பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: