தாவரவியல் பூங்காவில் ஆர்க்கிட் மலர்கள் பூக்க துவங்கின

ஊட்டி:  ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆர்க்கிட் செடிகளில் மலர்கள் பூக்க துவங்கியது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள ஆர்க்கிட் தாவர வளர்ப்பகத்தில் பெலானோப்சிஸ், டென்ட்ரோபியம், சிம்பிடியம், கேட்லியா உள்ளிட்ட 4 ரகங்களில் ஏராளமான ஆர்க்கிட் நாற்றுகள் தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் ‘டென்ட்ரோபியம்’ மற்றும் ‘கேட்லியா’ ஆர்கிட் மலர்கள் பூக்க துவங்கியுள்ளன.

 தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில்,`சிக்கிம் மாநிலத்தில் இருந்து அண்மையில் சிம்பிடியம் ரக ஆர்க்கிட் நாற்றுகள் திசு வளர்ப்பு முறையில் வாங்கப்பட்டு நாற்றுகள் தயார் செய்யப்பட்டு தொட்டிகளில் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை நன்கு பூக்க துவங்கியதும், கண்ணாடி மாளிகையில் சுற்றுலா பயணிகள் பார்வையிட காட்சிப்படுத்தப்படும்’ என்றனர்.

Related Stories: