குன்னூர் அரசு மருத்துவமனை மீது மரம் விழுந்து கட்டிடம் சேதம்: சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்பு

குன்னூர்:  குன்னூரில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அரசு மருத்துவமனை மீது மரம் விழுந்து கட்டிடம் சேதமடைந்தது.  இதே போல் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.  குன்னூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பெய்த பலத்த மழை காரணமாக குன்னூர் அரசு மருத்துவமனை மீது மரம் விழுந்தது. தீயணைப்பு துறையினர், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் நகராட்சி ஊழியர்கள் மரத்தை வெட்டி அப்புறப்புறத்தினர். காலை நேரம் என்பதால், ஊழியர்கள் குறைவாக இருந்தனர். இதனால் அவர்கள் அதிஷ்டவசமாக உயிர்தப்பினர். இதில், மருத்துவமனை கூரை மட்டும் சேதமடைந்தது.

இதே ேபால் குன்னூர் கோத்தகிரி நெடுஞ்சாலையில் உபாசி அருகே நேற்று மரம் ஒன்று மின்கம்பத்தின் மீது விழுந்து சாலையில் சரிந்தது. உடனே போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த குன்னூர் தீயணைப்புத்துறையினர்  விரைந்து சென்று மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினர்.  அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  மரம் விழுந்ததால் குன்னூர் கோத்தகிரி சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கடும் மேகமூட்டத்துடன் கடுங்குளிர் நிலவி வருகிறது.

Related Stories: