தொழில் நிறுவனங்களில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் நடவடிக்கை

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி விடுத்துள்ள அறிக்கையில்: சிவகங்கை மாவட்டத்தில் 14வயது நிறைவடையாத குழந்தையினை எந்த ஒரு தொழில் சம்பந்தப்பட்ட பணிகளிலும், தயாரிப்பு தொடர்புடைய செய்முறைகளிலும் பணி அமர்த்துவது தடை செய்யப்பட்டுள்ளது. மீறும் பட்சத்தில் ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமல் ரூ.50ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும். எனவே, கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள், பீடி தயாரிப்பு நிறுவனங்கள், மருந்து கடைகள் உள்ளிட்ட இதர நிறுவனங்களில் குழந்தைகளை பணிக்கு அமர்த்தினால் மேற்கண்ட தண்டனை விதிக்கப்படும். 14வயது நிறைவடைந்த 18வயது நிறைவடையாத வளர் இளம் பருவத்தினரை அபாயகரமான தொழில் தொடர்புடைய செங்கல் சூளை, கல்குவாரி, பட்டாசு தொழில் போன்ற இதரவகை பணிகளில் பணியமர்த்துவதும் தடை செய்யப்பட்டுள்ளது.

நிறுவனத்தில் பணிக்கு அமர்த்தப்படும் வளர் இளம் பருவத்தினரின் பெயர், பிறந்த தேதி, வேலை நேரம், ஓய்வு நேரம், வேலையின் தன்மை விபரங்கள் அடங்கிய பதிவேடு பராமரிக்க வேண்டும். குழந்தை தொழிலாளர் குறித்த புகார்களை சிவகங்கை, தொழிலாளர் உதவிஆணையர்(அமலாக்கம்) தொலை பேசி எண் 04575-240521, இலவச தொலைபேசி எண் 1098, //pencil.gov.in என்ற இணையதளத்திலும் தெரிவிக்கலாம்.  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

More