எஸ்டேட் பகுதிகளில் கொஞ்சி விளையாடும் யானைகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை பாதுகாப்பாக வைக்க வேண்டும்: வால்பாறை வனச்சரகர் அறிவுறுத்தல்

வால்பாறை: வால்பாறையில் உள்ள அடர்ந்த வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானைக்கூட்டம் எஸ்டேட்களில் உலா வருகின்றன. நேற்று பகலில் நல்லமுடி, ஹைபாரஸ்ட் எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் வலம் வந்தன.  இந்நிலையில் வால்பாறை வனச்சரகர்  மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தோட்ட நிர்வாகங்கள் தேயிலை செடிகளுக்கு தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்களை பாதுகாக்கப்பட்ட இடங்களில் வைக்கவேண்டும்.

தவறி அதனை யானை உட்கொண்டால் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. யானைகள் நடமாடும் எஸ்டேட்  பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். யானைகள் மற்றும் வனவிலங்குகள் தென்பட்டால் பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளிக்கவேண்டும்.  இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Related Stories: