உத்தரப்பிரதேசத்திற்கு சுற்றுலா வந்த 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி!!

லக்னோ : உத்தரப்பிரதேசத்திற்கு வந்த 4 வெளிநாட்டினருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ்களிலேயே மிக அதிகளவில் 50 பிறழ்வுகளுடன் புதிய வகை வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கடந்த 24ம் தேதி கண்டறியப்பட்டது. கவலைதரும் வைரசாக இதை வகைப்படுத்திய உலக சுகாதார நிறுவனம் ‘ஒமிக்ரான்’ என பெயரிட்டுள்ளது. இந்த வைரஸ் கண்டறியப்பட்டு உலக நாடுகள் சுதாரிப்பதற்குள் பல நாடுகளில் பரவி விட்டது.

தற்போது ஆஸ்திரேலியா பெல்ஜியம் போட்ஸ்வானா கனடா டென்மார்க் பிரான்ஸ் ஜெர்மனி ஹாங்காங் இஸ்ரேல் நெதர்லாந்து போர்ச்சுகல் ஸ்காட்லாந்து தென் ஆப்ரிக்கா செக் குடியரசு சுவிட்சர்லாந்து இங்கிலாந்து நாடுகளில் ஒமிக்ரான் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பல்வேறு நாடுகள் தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு பயண தடை விதித்துள்ளன.

இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவிற்கு வந்த 2 பெண்கள் உள்பட 4 வெளிநாட்டுப் பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து நால்வரும் சுற்றி வந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு சோதனை நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: