போக்குவரத்து விதிகளை மீறியதாக தமிழகம் முழுவதும் கடந்த ஆண்டு ரூ.218 கோடி அபராதம் வசூல்!!

சென்னை : தமிழ்நாட்டில் கொரோனா காலத்திலும் போலீஸ் அபராதம் வசூலிப்பது குறையவில்லை. போக்குவரத்து விதிகளை மீறியதாக மாநிலம் முழுவதும் கடந்த ஆண்டு 218 கோடி ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு காவல்துறை அளித்து இருக்கும் பதிலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதுமாக எந்தெந்த ஆண்டு எவ்வளவு வசூல் என்பதை பார்க்கலாம்.

   தமிழ்நாடு

2020 ரூ. 218 கோடி

2019 ரூ. 165.81 கோடி

2018 ரூ.118.18 கோடி

2017 ரூ. 155.60 கோடி

2016 ரூ. 101.34 கோடி

சென்னை

2020 ரூ. 66.31 கோடி

2019 ரூ. 33.39 கோடி

2018 ரூ.27.83 கோடி

2017 ரூ. 25.58 கோடி

2016 ரூ. 24.14 கோடி

கடந்த 5 ஆண்டுகளாகவே சென்னையில் போக்குவரத்து விதிகளை மீறியது தொடர்பான அபராத வசூலின் மதிப்பு அதிகரித்து கொண்டே உள்ளது.

Related Stories:

More