×

சென்னை செம்மஞ்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது சென்னை செம்மஞ்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை பார்வையிடுவதற்காக நேரில் சென்றுள்ளார். சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் தற்போது செம்மஞ்சேரியில் மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை பாரவையிட்டு அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகளையும் பார்வையிடுவதற்காக சென்றுள்ளார். கனமழை காரணமாக சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றுவதற்காக மாநகராட்சி நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மழைநீரை வெளியேற்றுவதற்காக பெரிய மோட்டார்கள் வைத்து அந்நீரை வெளியேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. நிவாரண பணிகளில் ஈடுபடுவோருக்கு ஊக்கமளிக்கும் விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது சீரமைப்பு பணிகளையும் ஆய்வு செய்து வரும் முதலமைச்சர் செம்மஞ்சேரியில் ஆய்வு பணியை மேற்கொண்டுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள மழைநீர் வடிகால்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு பணிகளை தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். கனமழை எதிரொலியாக சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியானது கிட்டத்தட்ட 6700 குடியிருப்புகளை கொண்டது, மழை வெள்ளத்தால் சூழ்ந்து கடந்த 4 நாட்களாக இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை ஒட்டியுள்ள கால்வாயும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது கரைபுரண்டு ஓடிக்கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மீட்புப்பணிகளை செய்வதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இந்த பகுதியில் கிட்டத்தட்ட 5 ராட்சத நீர் இறைக்கும் இயந்திரங்கள் மூலம் தற்போது இங்கு தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியானது நடைபெற்று வருகிறது. மேலும் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்களும் இந்த பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த பகுதி முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் தொற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது என கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது இங்கு தற்போது 20க்கும் மேற்பட்ட இடங்களில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்று வருகின்றன. தற்போது செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள கால்வாயை தற்போது முதல்வர் ஆய்வு செய்து வருகிறார்.

Tags : Chief Minister ,MK Stalin ,Chennai Chemmancheri , MK Stalin
× RELATED என்எல்சி திட்டங்களுக்கு நிலம்...