×

கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு தொழில்கள் நலிவு: அத்தியாவசிய, வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை குறைப்பது எப்போது?: மக்களவையில் தயாநிதி மாறன் எம்பி கேள்வி

புதுடெல்லி: கொரோனா பேரிடர் காலத்தில் பல்வேறு தொழில்கள் நலிவடைந்த நிலையில், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது எப்போது என்று மக்களவையில் தயாநிதிமாறன் எம்பி நேற்று கேள்வி எழுப்பினார். மக்களவையில் எழுத்துப்பூர்வமான பதில்களுக்காக மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி எழுப்பினார். ‘கொரோனா பேரிடர் காலத்தில், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. வரியை குறைப்பது எப்போது என கேள்வி எழுப்பினார் இதற்கு, ஒன்றிய நிதி இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் ‘இந்திய அரசு, இந்தியாவின் பொருளாதார நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. மேலும், அவசியத்துக்கான விரைவான பொருளாதார மீட்சி, பொருளாதார வளர்ச்சிக்கான பரிந்துரைகள் மற்றும் கருத்துகளுக்காக அது சார்ந்த அனைத்து துறையினர்களுடன் தீவிரமாக ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் தொடர்பாக பல்வேறு துறைகளின் பிரதிநிதிகளிடம் இருந்து கொள்கைகளை உருவாக்க உதவும் தகவல்கள் பெறுவதை அமைச்சகம் வழக்கமாக கொண்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் பரிந்துரைகளின் அடிப்படையிலேயே ஜிஎஸ்டி வரிகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ஜிஎஸ்டி கவுன்சிலின் 43 மற்றும் 44வது கூட்டத்தில், கோவிட்-19 சிகிச்சைக்கான குறிப்பிட்ட மருந்துகள், மருந்துப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தை 2021 செப்டம்பர் வரை குறைக்கும்படி பரிந்துரைக்கப்பட்டது. கவுன்சிலின் 45வது கூட்டத்திலும், கோவிட்-19 சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் 11 குறிப்பிட்ட மருந்துகள் மீதான ஜிஎஸ்டி வரி விகிதத்தில் சலுகை வழங்கும்படி பரிந்துரைக்கப்பட்டது’. இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

Tags : Corona disaster ,Dayanidhi Maran ,Lok Sabha , Corona Disaster, Dayanidhi Maran MP, Question
× RELATED திமுக வேட்பாளர்களான தயாநிதி மாறன்,...