×

142 அடியாக உயர்ந்தது முல்லைப் பெரியாறு அணை

கூடலூர்: முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீர் தேக்க உச்சநீதிமன்றம் 2014, மே 7ம் தேதி உத்தரவிட்டது. மூன்று முறை அணையின் நீர்மட்டம் 142 அடியை எட்டியது. இந்த ஆண்டு முல்லைப் பெரியாறு அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி ‘‘ரூல் கர்வ்’’ அட்டவணை விதிப்படி அணைநீரை சிறிது சிறிதாக உயர்த்தி வந்தனர். இதற்காக கூடுதல் நீர்வரத்து உபரி நீராக கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வந்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின் 4வது முறையாக நேற்று இரவு அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்த்தப்பட்டது. நேற்றிரவு நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,322 கன அடியாக இருந்தது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 1,867 கனஅடியும், அணை மதகுகள் வழியாக கேரள பகுதிக்கு  135 கனஅடியும் உபரிநீராக திறக்கப்பட்டது. அணையின் நீர்மட்டம் 142 அடியானதையொட்டி, தமிழக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : Mullaperiyar Dam , mullai periyar dam
× RELATED பென்னிகுக் நினைவாக லோயர் கேம்ப் அரசு...