ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்யா பரிசோதனை

மாஸ்கோ: ஒலியின் வேகத்தை விட 9 மடங்கு அதிவேகமாக பாயக்கூடிய ஜிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்ய ராணுவம் தயாரித்துள்ளது. இந்த ஏவுகணை 1000 கிமீ வரை பயணித்து இலக்கை துல்லியமாக தகர்க்கக் கூடியது.  இந்த ஏவுகணையை ரஷ்ய கடற்படை நேற்று பரிசோதனை செய்தது. வெள்ளை கடலில் போர்க்கப்பலில் இருந்து ஏவப்பட்ட ஜிர்கான் ஏவுகணை 400 கிமீ தொலைவில் வைக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக தகர்த்ததாக ரஷ்ய ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஏவுகணை அடுத்த ஆண்டு ராணுவத்தில் சேர்க்க ரஷ்யா திட்டமிட்டுள்ளது.

Related Stories: