×

நீரில் மூழ்கிவிட்டதால் பயிர் பாதிப்புகளை மீண்டும் கணக்கிட்டு கூடுதல் இழப்பீடு: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்கள் கடந்த 200 ஆண்டுகளில் இல்லாத கனமழையை எதிர்கொண்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு அறிவிக்கப்பட்ட இழப்பீடும் வழங்கப்படாத நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்து வரும் மழையில் இன்னும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதனால், பல லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி விட்டன.
எனவே, காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் மழையால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தமிழக அரசு மீண்டும் ஆய்வும், கணக்கெடுப்பும் மேற்கொள்ள வேண்டும். அதன்படி எவ்வளவு ஏக்கரில் நெற்பயிர்களும், பிற பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன என்பதை தீர்மானித்து உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல் சாகுபடிக்கான செலவுகள் கணிசமாக அதிகரித்து விட்ட நிலையில், அதற்கேற்ற அளவில் இழப்பீடு உயர்த்தி வழங்கப்படுவதுதான் நியாயமானதாக இருக்கும். எனவே, மழையில் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வீதம் இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும்.

Tags : Additional compensation for recalculation of crop damage due to drowning: Ramadas insistence
× RELATED ஆவடி பகுதியில் கனமழையால் 200 ஏக்கர்...