×

சிவசங்கர் பாபாவின் சுசில்ஹரி பள்ளி வளாகத்தில் உள்ள வீடுகளில் சிபிசிஐடி போலீசார் ஆய்வு

சென்னை: சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில் பிரபல டான்ஸ் சாமியார் சிவசங்கர் பாபாவுக்கு சொந்தமான சுசில்ஹரி பன்னாட்டு உறைவிடப்பள்ளி உள்ளது. இங்கு படித்து வந்த மாணவிகளுக்கு, பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வந்த புகார்களின் பேரில் டெல்லியில் பதுங்கி இருந்த சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை சுசில் ஹரி பள்ளி அமைந்துள்ள ராமராஜ்யம் வளாகத்தில் உள்ளது. அவருக்கு உதவியாக இருந்த 6 பேரின் வீடுகளில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.

நேற்று காலை 10 மணியளவில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டி.எஸ்.பி. வேல்முருகன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சுசில்ஹரி பள்ளி, ராமராஜ்யம் ஆசிரமம், சிவசங்கர் பாபாவுக்கு உதவிய நபர்கள் தங்கி இருந்த கல்கி கார்டன், பழனி கார்டன் ஆகிய குடியிருப்புகளுக்கு சென்று வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது.  இதை தொடர்ந்து ரெயின்போ காலனி குடியிருப்பில் உள்ள பள்ளி முதல்வர் கணபதி பட்டாபிராமன் வீட்டிலிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். சிவசங்கர் பாபாவை அழைத்து வந்து அறையை திறக்க முடிவு செய்யப்பட் டுள்ளது.


Tags : CBCID ,Sivasankar Baba ,Sushilhari , CBCID police inspect houses on Sivasankar Baba's Sushilhari school premises
× RELATED கள்ளக்குறிச்சி கலவர வழக்கின்...