அரசுக்கு ஓ.பி.எஸ் கோரிக்கை அம்மா உணவக ஊழியர்கள் பணியில் தொடர நடவடிக்கை

சென்னை: அம்மா உணவக ஊழிர்களை பணியில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அம்மா உணவகங்களில் கணவனால் கைவிடப்பட்டவர்கள், விதவைகள், மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் தான் பணியாற்றுகின்றனர். கொரோனா நோய் தொற்று உச்சத்தில் இருக்கும் போது அனைத்து உணவகங்களும் முற்றிலுமாக மூடப்பட்ட நிலையில், தங்களது உயிரை துச்சமென மதித்து நேரம் காலம் பார்க்காமல் உழைத்தவர்கள். எனவே முதல்வர் இதில் உடனடியாக தலையிட்டு தீர விசாரித்து அம்மா உணவகங்களில் பணியாற்றும் ஏழை, எளிய தொழிலாளர்கள் தொடர்ந்து பணியாற்றிட வழிவகை செய்திட கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: