3 ஆண்டுகளுக்கு முன் உயரமாக கட்டப்பட்ட புதிய மதகால் 100 ஏக்கர் நடவு பாதிக்கும் நிலை-வீடுகளை மழைநீர் சூழும் அபாயம்

தா.பழூர் : 3 ஆண்டுகளுக்கு முன் உயரமாக கட்டப்பட்ட புதிய மதகால் 100 ஏக்கர் நடவு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகளை மழைநீர் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கார்குடி ஊராட்சியில் தெற்கு எரி அமைந்துள்ளது. இது பாசன எரி ஆகும் தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக எரியின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. இந்த ஏரி முழு அளவை எட்டினால் வடிகாலான சின்ன ஓடை வழியாக சுத்தமல்லி நீர் தேக்கத்திற்கு சென்றடைந்து விடும்.

இதனால் அங்குள்ள விவசாயிகள் அதிகபாதிப்பு இல்லாமல் இருந்தார்கள். ஆனால் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பாக பழயவடிகால் சேதம் அடைந்துள்ளதால் புதியவடிகால் அமைக்கபட்டது. இந்த புதிய வடிகாலை பழைய வடிகாலின் உயரத்தை விட அதிகமாக உயர்திவிட்டனர். இதனால் எரியின் நீர்மட்டம் உயர்வதால் குடியிருக்கும் இடம்வரை தண்ணீரானது தேங்கி கிடகின்றது.

மேலும் அப்பகுதியில் உள்ள 100 ஏக்கர் மோட்டார் பாசனம் மூலம் விவசாயம் செய்யப்பட்ட விவசாய நிலங்கள், நெற்பயிர்கள் சேதம் அடைந்தது. வடிகால் மதகால் பாதிப்பு ஏற்படும் என முன் மாவட்ட கலெக்டரிடமும் நீர்வளத்துரை அதிகாரிகளிடமும் மனு கொடுத்தும் இது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இதனால் விவசாய நிலங்களும், வீடுகளும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்து உடனடியாக தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More