கரூர் பூ மார்க்கெட் சாலையில் சுற்றித்திரியும் வெள்ளாடுகள்-போக்குவரத்துக்கு இடையூறு

கரூர் : கரூர் பூ மார்க்கெட் செல்லும் சாலையில் அணி திரண்டு செல்லும் ஆடு போன்ற கால்நடைகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூர் ரயில்வே நிலையம் செல்லும் வழியில் பூமார்க்கெட், மார்க்கெட் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வாகன போக்குவரத்து அதிகளவு நடைபெற்று வரும் இந்த பகுதியில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த கால்நடைகள் அதிகளவு ஒன்று சேர்ந்து திரிவதால் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாகும் சூழல் இந்த பகுதியில் அடிக்கடி நிலவி வருகிறது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Related Stories: