பாபநாசத்தில் கீழே சாய்ந்து விழும் ஆபத்தான மின்கம்பம் உடனே மாற்றம்

கும்பகோணம் : கும்பகோணம் அருகே பாபநாசத்தில் ஆபத்தான நிலையிலிருந்த மின் கம்பம் தினகரன் செய்தி எதிரொலியாக மாற்றப்பட்டது.தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் கடைவீதி பிரதான சாலையில் ஆபத்தாக சாயும் நிலையில் இருந்த மின்கம்பம் மாற்ற வேண்டும் என தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதனை தொடர்ந்து பாபநாசம் மின்சார வாரிய துறையினர் தொடர்ந்து பெய்த கனமழையால் பணி செய்ய இயலாத சூழ்நிலை இருந்தது.

மேலும் இந்த கம்பத்தின் வழியாக உயர் மின்னழுத்தம் செல்கிறது. தஞ்சாவூர்-கும்பகோணம் சாலை வழியாகவும் பாபநாசம்-சாலியமங்கலம் சாலை வழியாகவும் உயர்ரக, கனரக வாகனங்கள் செல்லும் போது தொங்குகின்ற மின்கம்பிகள் மீது உரசி சென்றது. அடிக்கடி வாகனங்கள் செல்வதால் இந்த மின்கம்பத்தின் மீது மோதி செல்கிறது. பல ஆண்டுகளுக்கு முன் பொருத்தப்பட்ட இந்த மின்கம்பம் தற்போது சாய்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருந்தது.

மின்கம்பிகள் அறுந்து விழும் நிலையில் விபத்துக்கள் ஏற்படும் சூழ்நிலை உள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது.இந்நிலையில் பாபநாசம் பகுதியில் மழை குறைந்த இருந்ததால் கடைவீதியில் பிரதான சாலையில் ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றி புதிய மின் கம்பம் நடப்பட்டு பொதுமக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது. தினகரன் செய்தி எதிரொலியாக நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும், தினகரன் நாளிதழுக்கும் அப்பகுதியினர் நன்றியை தெரிவித்துள்ளனர்.

Related Stories: