திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டில் ஈடுபட்டதாக 4 பேர் கைது

திருச்சி: திருச்சி சரகத்துக்குட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் ஆடு திருட்டில் ஈடுபட்டதாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி சரகத்தில் 6 நாட்களில் ஆடு திருட்டு தொடர்பாக மொத்தம் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆடு திருடிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து சுமார் ரூ. 3 லட்சம் மதிப்பிலான 6 ஆடுகளை கைப்பற்றனர். திருச்சி மத்திய காவல்துறை தலைவர் உத்தரவின்படி கடந்த 23-ல் ஆடு திருடர்களை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. ஆடு திருடுபவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க தனிப்படையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: