புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது?.. உச்சநீதிமன்றம் கேள்வி

டெல்லி: புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் எனும் வீரியமிக்க வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது. இந்நிலையில் காற்று மாசு தொடர்பான வழக்கின் போது புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பினார். புது வகை கொரோனா புதிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. புதிய வகை கொரோனா பிரச்சனையாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? என கேள்வி எழுப்பினார்.

புதிய வைரஸை சமாளிக்கும் வேலைகளை மத்திய அரசு செய்து வருகிறது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் விளக்கம் அளித்த அவர்; மாசு வழக்குடன் கொரோனா தொடர்பாக விசாரிக்க வேண்டாம் எனவும் சொலிசிட்டர் ஜெனரல் கோரிக்கை விடுத்தார். காற்று மாசு டெல்லியில் காற்று மாசை குறைக்க 48 மணி நேரத்தில் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். காற்று மாசை குறைக்க நீதிமன்றம் பிறப்பித்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். பின்பற்றவில்லையெனில் இதற்காக சிறப்புக்குழு அமைத்து செயல்படுத்த உத்தரவிட வேண்டி வரும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

Related Stories:

More