×

கனடாவில் 2 பேருக்கு உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் கிருமி தொற்று உறுதி!!

டெல்லி : கனடாவில் 2 பேருக்கு உருமாற்றம் அடைந்த ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் நைஜிரியாவில் இருந்து திரும்பிய பயணிகளுக்கு நடத்தப்பட்ட சோதனையில் 2 பேருக்கு ஓமைக்ரான் கிருமி தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கனடா சுகாதாரத்துறை அமைச்சர், பாதிக்கப்பட்ட இருவரும் ஆண்டாரியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் என்று கூறியுள்ளார். 2 பேரையும் தனிமைப்படுத்தி கண்காணித்து வருவதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அதிகாரிகள் அவருடன் தொடர்பில் இருந்து குடும்ப உறுப்பினர் மற்றும் நண்பர்களை கண்டறிந்து சோதனைக்கு உட்படுத்தி வருவதாக கூறியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை ஓமைக்ரான் கொரோனா பரவல் எதிரொலியாக 7 ஆப்ரிக்க நாடுகளுக்கான பயணத்திற்கு கனடா அரசு தடை விதித்து இருந்தது. அந்த பட்டியலில் நைஜிரியா இடம் பெறாத நிலையில், அங்கு இருந்து திரும்பிய 2 பேருக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் அடைந்த ஓமைக்ரான் கிருமி தொற்று கனடாவில் கண்டறியப்பட்டுள்ளதால் வட அமெரிக்காவிலும் ஓமைக்ரான் பரவி வருவது உறுதியாகி உள்ளது.


Tags : Canada , ஓமைக்ரான்
× RELATED கள்ளக்காதலிக்காக நடந்த கொடூரம்...