உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.63 கோடியாக உயர்வு!!

ஜெனீவா : உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23.63 கோடியாக உயர்ந்துள்ளது.உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனிடையே தென் ஆப்பிரிக்காவில் ‘ஒமிக்ரான்’ என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.17 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,17,40,249 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,63,66,225 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 52 லட்சத்து 16 ஆயிரத்து 866 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றுக்கு தற்போது 2,01,57,158 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 83,868 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா  - பாதிப்பு - 4,90,93,775,   உயிரிழப்பு -7,99,391,    குணமடைந்தோர் - 3,88,74,408

இந்தியா        -  பாதிப்பு - 3,45,78,749,  உயிரிழப்பு -  4,68,574,   குணமடைந்தோர் - 3,39,98,278

பிரேசில்        -  பாதிப்பு - 2,20,80,906,  உயிரிழப்பு -  6,14,314,  குணமடைந்தோர் - 2,12,93,314  

இங்கிலாந்து- பாதிப்பு -  1,01,46,915,  உயிரிழப்பு -  1,44,775,  குணமடைந்தோர் -  89,85,054

ரஷ்யா           -  பாதிப்பு -   95,70,373,   உயிரிழப்பு -  2,72,755,   குணமடைந்தோர் -   82,68,111     

தொடர்ந்து கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் விவரம்:-

துருக்கி        - 87,46,055

பிரான்ஸ்     -  76,20,048

ஈரான்          - 61,08,882

ஜெர்மனி         - 57,82,961

அர்ஜெண்டினா- 53,26,448

ஸ்பெயின்       - 51,31,012

கொலம்பியா -  50,65,373

இத்தாலி          - 50,07,818

இந்தோனேசியா- 42,55,936

மெக்சிகோ     - 38,82,792

Related Stories:

More